மன்னார் சதோச வளாகத்தில் தலையில் வெட்டு தழும்புடன் மீட்க்கப்பட்ட மண்டையோடு.....
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டு வருகின்றது மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது 06-09-2018-66 வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன
விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது நிலையில்
இதுவரை குறித்த வளாகத்தில் 120 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 114 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன ஒவ்வொரு நாள் அகழ்வு பணியின்போதும் புதிதாக மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றைய நாள் பணிகளின் இறுதி நேரத்தில் மண்டையோடு ஒன்றின் பகுதியில் வெட்டு தழும்பு ஒன்று காணப்பட்டது அவதானிக்கப்பட்டுள்ளது குறித்த வெட்டு தழும்புடன் உள்ள மண்டையோட்டின் வெட்டானது பிரோத பரிசோதனையின் போது ஏற்பட்டதா அல்லது கூரிய ஆயூதங்களால் தாக்கப்பட்டபோது ஏற்பட்டதா.... அல்லதா வேறு விதமாக ஏற்பட்டதா.... என்பது தொடர்பான விடயங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
மன்னார் சதோச வளாகத்தில் தலையில் வெட்டு தழும்புடன் மீட்க்கப்பட்ட மண்டையோடு.....
Reviewed by Author
on
September 07, 2018
Rating:
Reviewed by Author
on
September 07, 2018
Rating:



No comments:
Post a Comment