அண்மைய செய்திகள்

recent
-

உலக சாதனை அதிக அளவு படைத்துள்ள நாடு சுவிட்சர்லாந்து


இயற்கைக் காட்சிகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் சிறந்த போக்குவரத்து அமைப்பிற்கும் பாலாடைக் கட்டிக்கும் சாக்லேட்டிற்கும் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து எத்தனை விடயங்களில் உலக சாதனை படைத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
அவற்றில் சில உங்கள் பார்வைக்காக...
உலகின் சாய்வான பல் சக்கர ரயில் Pilatusbahn
1889ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ரயில் சேவை Lucerne ஏரிப்பகுதியில் செல்லும்போது 48 டிகிரி கோணத்தில் செல்கிறது, ஆனால் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 9 கிலோமீற்றர்கள்தான்.
உலகின் நீண்ட ரயில் குகைப்பாதை Gotthard Base Tunnel

57 கிலோமீற்றர் நீளமுள்ள இந்த குகைப்பாதைதான் உலகின் நீளமான குகைப்பாதையாகும்.
பாறைகளுக்கடியில் 2300 மீற்றர் ஆளத்தில் அமைந்துள்ள இந்த பாதையால் சூரிச்சிலிருந்து லுகானோவிற்கு 45 நிமிடங்களில் சென்று விட முடியும்.
உலகின் நீண்ட படிக்கட்டு Niesen
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுற்றுலாப்பயணிகளுக்கு திறந்து விடப்படும் Niesen, Bernese Alps பகுதியில் ரயில்பாதை ஒன்றை ஒட்டி அமைந்துள்ளது. இந்த படிக்கட்டில் 11,674 படிகள் உள்ளன.
உலகின் முதல் சுழலும் கேபிள் கார்
இதுவும் Lucerne ஏரியின் அருகில்தான் அமைக்கப்பட்டுள்ளது. 3,020 மீற்றர் உயரத்தில் சுற்றுலாப்பயணிகள் பயணிக்கும்போது அதில் பயணிப்பவர்கள் இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வகையில் 360 டிகிரி சுழலக் கூடியது இந்த கேபிள் கார்.
உலகின் பயங்கரமான அச்சத்தையூட்டும் தொங்கு பாலம் Titlis Cliff Walk
வெறும் ஒரு மீற்றர் அகலம், 100 மீற்றர் நீளம் கொண்ட இந்த தொங்கு பாலம் பனிப்பாறை ஒன்றின் மீது 500 மீற்றர் உயரத்தில் தலை சுற்றலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Titlis மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 3000 மீற்றர் உயரத்தில் இது அமைந்துள்ளது.
உலகின் அதிக கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை பெற்றவர்
இந்த நாட்டைச் சேர்ந்தவர்தான்: Roger Federer
டென்னிஸ் உலக சாதனையாளரான Roger Federer ஜனவரி மாதம் தனது 20ஆவது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை பெற்றார், அவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் என்பதும் சுவிட்சர்லாந்துக்கு சிறப்புதானே.
உலகின் மிகச்சிறிய விஸ்கி பார் Graubunden
வெறும் 8.53 சதுர மீற்றர் பரப்பில் அமைந்துள்ள இந்த பார்தான் உலகின் மிகச்சிறிய விஸ்கி பார். ஆனால் இங்கு 260 வகை விஸ்கி கிடைக்கும்.
உலகின் மிகப்பெரிய பனி வீடு Zermatt
உலகின் மிகப்பெரிய இக்ளூ என்று அழைக்கப்படும் பனி வீடு Zermattஇல் தான் கட்டப்பட்டுள்ளது.
10.5 மீற்றர் உயரமும் உள்ளே 12.9 மீற்றர் விட்டமும் கொண்ட இந்த இக்ளூவை அமைக்க 18 பேர் கொண்ட ஒரு குழுவுக்கு 3 வாரங்கள் ஆயிற்று.
உலகின் அதிக சாக்லேட் உண்ணும் நாடு
சுவிஸ் சாக்லேட்கள் உலகம் முழுவதிலும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்த விடயம் என்றாலும் அதிக அளவில் சாக்லேட் உண்பவர்களும் சுவிஸ் நாட்டவர்கள்தான் என்பதில் ஆச்சரியம் இருக்க முடியாதுதான்.
2015ஆம் ஆண்டு கணக்கின்படி சுவிஸ் மக்கள் ஆண்டுக்கு ஆளுக்கு 8.98 கிலோ சாக்லேட் சாப்பிடுகிறார்களாம்.
சூரிய சக்தி விமானத்தில் முதலில் உலகப் பயணம்
2016ஆம் ஆண்டு Solar Impulse என்னும் சூரிய சக்தி விமானத்தை உருவாக்கிய Bertrand Piccard மற்றும் André Borschberg ஆகிய இருவரும் தங்கள் விமானத்தில் உலகம் முழுவதையும் சுற்றி வந்தார்கள்.
அது மட்டுமின்றி மிக நீண்ட பயணம், அதிக உயரத்தில் பயணம் உட்பட எட்டு உலக சாதனைகளை அவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள்.
உலக சாதனை அதிக அளவு படைத்துள்ள நாடு சுவிட்சர்லாந்து Reviewed by Author on September 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.