2019ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு : சம்பந்தனுக்கு 9 கோடி ரூபா -
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
2019 ஆம் நிதியாண்டின் தேவைக்காக 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்த நீதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்பட்டது.
இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரத்து 611 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், ஜனாதிபதிக்கு ஆயிரத்து 347 கோடியே 71 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும், பிரதமருக்கு 166 கோடி 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2019ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு : சம்பந்தனுக்கு 9 கோடி ரூபா -
Reviewed by Author
on
October 10, 2018
Rating:

No comments:
Post a Comment