சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிராவோ: செய்துள்ள சாதனைகள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 2968 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
அதிகபட்சமாக ஒரு போட்டியில் 112 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதோடு 199 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள பிராவோவின் சிறந்த பந்துவீச்சு 43 ஓட்டங்களை விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியது ஆகும்.
பிராவோ மொத்தமாக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

அதிகபட்சமாக ஒரு போட்டியில் 113 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 86 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவரின் சிறந்த பந்துவீச்சு 55 ஓட்டங்களை விட்டு கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியது ஆகும்.
66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, 1142 ஓட்டங்களை மொத்தம் எடுத்துள்ளார்.
அவரின் அதிகபட்ச ஓட்டம் 66 ஆகும்.
டி20 போட்டிகளில் அவர் 52 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
28 ஓட்டங்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியது பிராவோவின் சிறந்த பந்துவீச்சாகும்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிராவோ: செய்துள்ள சாதனைகள்
Reviewed by Author
on
October 26, 2018
Rating:
No comments:
Post a Comment