மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவிகள் தேசிய மட்ட ஆங்கில தினப் போட்டியில்
கொழும்பில் இடம் பெற்ற தேசிய மட்ட ஆங்கில தினப் போட்டியில் கலந்து கொண்ட மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவிகள் இருவர் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்.
கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் அண்மையில் குறித்த ஆங்கில தினப் போட்டி இடம் பெற்றுள்ளது.
இதன் போது ஆங்கில கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி செல்வி.நயோலின் அப்றியானா குபேரகுமார் 1 ஆம் இடத்தினையும்,ஆங்கிலம் சொல்வளம் போட்டியில் கலந்து கொண்ட மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி செல்வி. சேவியர் கிறிசேரா 3 ஆம் இடத்தினையும்,தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி திறமைச்சித்தியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவிகள் தேசிய மட்ட ஆங்கில தினப் போட்டியில்
Reviewed by Author
on
October 23, 2018
Rating:

No comments:
Post a Comment