கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் -
ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய்க்கிருமிகளின் தாக்கமும் அதிகம் இருக்கும்.
எனவே பெண்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உணவுப் பொருட்களின் மூலம் கிருமிகளானது உடலினுள் சென்று கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.
ஃபெடா சீஸ்
கர்ப்பிணிகள் ஃபெடா சீஸ் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள லிஸ்டெரியா என்னும் பாக்டீரியா குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடியது.
பச்சை பால்
பச்சை பாலில் லிஸ்டெரியா, ஈ-கோலை, கேம்பைலோபேக்டர் போன்ற பாக்டீரியாக்கள் இருக்கும். இவை நஞ்சுக்கொடியைத் தாக்கி, குழந்தைக்கு நோய்த்தொற்றை உண்டாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.கடல் உணவுகள்
கடல் உணவுகளை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் பாக்டீரியாக்கள் மற்றும் மெர்குரி அதிகம் இருக்கும். எனவே இதனை அதிகம் உட்கொள்ளும் போது, அதனால் நரம்பு மண்டலம் நஞ்சடையக்கூடும்.
சமைக்கப்படாத உணவுகள்
கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளை நன்கு முழுமையாக சமைத்து தான் சாப்பிட வேண்டும். குறிப்பாக முட்டை, இறைச்சி போன்றவற்றை நன்கு சமைத்து தான் சாப்பிட வேண்டும்.பதப்படுத்தப்பட்ட ஜூஸ்கள்
டின்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களில் கெமிக்கல்கள் மட்டுமின்றி, குழந்தையின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் மோசமான கிருமிகள் இருக்கும். இதனை கர்ப்பிணிகள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.
பப்பாளி மற்றும் அன்னாசி
இந்த பழங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும். ஆகவே இந்த பழங்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்கொள்ளாமல் இருப்பது, குழந்தைக்கு நல்லது. இல்லாவிட்டால், கருச்சிதைவை சந்திக்கக்கூடும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் -
Reviewed by Author
on
November 30, 2018
Rating:
No comments:
Post a Comment