குழந்தைகளை கடத்தும் நபர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்: ரஜினிகாந்த் ஆவேசம் -
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், சினிமா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது எம்.ஜி.ஆர் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா என்ற கேள்விக்கு, அவர் ஒரு தெய்வப்பிறவி என்றும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக அவர் கூறுகையில்,
‘கடத்தப்படும் குழந்தைகளை பார்த்தால் எமோஷன் ஆகும். கடத்தப்பட்ட குழந்தைகளை கொண்டு சென்று பிச்சை எடுக்க வைப்பதை பார்த்தால் கோபம் வரும். இதுபோன்ற குழந்தைகளை வைத்து தொழில் செய்வதைப் பார்த்தால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தோன்றும்’ என தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை கடத்தும் நபர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்: ரஜினிகாந்த் ஆவேசம் -
Reviewed by Author
on
November 07, 2018
Rating:
No comments:
Post a Comment