அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோத விவசாயத்தை பார்வையிடச் சென்றவர்கள் மீது தாக்குதல் பொலிசில் முறையீடு செய்தும் ....

மன்னார்  கட்டுக்கரைக்குளத்தின் கீழ்  நொச்சிக்குளம் புலவில் ஒருவர்
சட்டவிரோதமான முறையில் விவசாயத்தை மேற்கொண்டபோது அது விடயமாக விசாரிக்கச் சென்ற பொறியியல் உதவியாளர் மற்றும் விவசாய அமைப்பின் தலைவர் தாக்கப்பட்டமைக்கு பொலிசில் முறையிட்டும் இதுவிடயமாக பொலிசார் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென விவசாய அமைப்புக்கள் அதிருப்தி கொண்டதுடன் இது விடயமாகவும் ஆராய்ந்துள்ளது.

இது விடயமாக தெரிவிக்கப்படுவதாவது கடந்த வெள்ளிக்கிழமை (02.11.2018)
மன்னார் பிரதான கட்டுக்கரைக்குளத்தின் கீழ் உள்ள அடைக்கலமோட்டை
வாய்க்கால் பகுதியிலுள்ள புலவுக் காணியில் ஒருவர் சட்டவிரோதமாக விவசாயம் மேற்கொள்வதாக கட்டுக்கரைகுளம் முகாமைத்துவக் குழுவுக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கட்டுக்கரைக்களத்தின் முகாமைத்துவ குழுவின்
வேண்டுகோளுக்கிணங்க இப் பகுதியின் அடைக்கலமோட்டை வாய்க்காலுக்கு பொறுப்பான பொறியியல் உதவியாளர் ஒருவரும் இவருடன் விவசாய அமைப்பின் தலைவர் ஒருவரும் நிலமையை நேரில் பார்வையிடுவதற்காக அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அப்பொழுது சட்டவிரோதமக அரசாங்கத்தின் புலவுக் காணியில் விவசாயி ஒருவர் உழுது கொண்டிருந்தபொழுது இவற்றை கண்காணிக்கச் சென்ற நபர் ஒருவர் புகைப்படம் எடுத்தபொழுது சம்பந்தப்பட்ட விவசாயி இவர்கள் எடுத்த
புகைப்படத்தை   அழித்து விடும்படி தெரிவித்து   இருவரையும் கைகளாலும்
மண்வெட்டியாலும் தாக்கியமையால் காயமுற்ற இவர்கள் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது விடயமாக உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்தும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென நேற்று புதன் கிழமை (07.11.2018) கட்டுக்கரைக்குளம் திட்ட முகாமைத்துவக் குழுக்கள் கட்டுக்கரைக்குளம் திட்ட முகாமைத்துவ முகாமைத்துவக் குழு  தலைவர் எம்.எஸ்.சில்வா தலைமையில் இதன் கேட்போர் கூடத்தில் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இதற்கமைய எதிர்வரும் திங்கள் கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரையும் பொலிஸ் அத்தியட்சகரையும் இது விடயமாக சந்தித்து மகஐர்கள் வழங்கி முறையீடு செய்வது என தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் புலவுக்காணிகளில் காலபோகம் செய்வதற்கு விட்டுக் கொடுக்கப்படுமாகில் தங்கள் நிலங்களில் கட்டுக்கரைக்குளத்தை நம்பி காலபோகம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் இவ் ஆலோசனைக் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.




சட்டவிரோத விவசாயத்தை பார்வையிடச் சென்றவர்கள் மீது தாக்குதல் பொலிசில் முறையீடு செய்தும் .... Reviewed by Author on November 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.