சுவிஸில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை: ஆய்வில் வெளியான தகவல் -
எதிர்காலம் தொடர்பான அச்சம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
சுவிட்சர்லாந்தில் கடந்த 1991 ஆண்டு முதல் 2014 வரையான காலகட்டத்தில் மொத்தம் 447 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஆனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆண்கள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை கடந்த காலங்களில் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சுவிஸ் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரிற்றர் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், வெளியான தகவல்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்றார்.
சுவிட்சர்லாந்தில் சுமார் 52,000 பண்ணைகள் உள்ளன. அதில் தற்போது ஆண்டுக்கு 1,000 பண்ணைகள் வரை மூடப்பட்டு வருகிறது.
நாள்தோறும் 75 வயதுக்கு மேற்பட்ட இரண்டு அல்லது 3 ஆண்கள் சுவிஸில் தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் தற்கொலை எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு விழிப்புணர்வு திட்டம் ஒன்றை வகுத்தது.
இதன்படி தற்கொலை எண்ணிக்கையை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.
சுவிஸில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை: ஆய்வில் வெளியான தகவல் -
Reviewed by Author
on
November 12, 2018
Rating:

No comments:
Post a Comment