அண்மைய செய்திகள்

recent
-

8 தமிழர்களையும் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம் -


கடந்த 16 ஆம் தேதி தமிழகம், இராமேஸ்வரம், பாம்பன் மற்றும் ஜெகாதப்பட்டனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மறுநாள் நீர் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து நீர் வளத்துறையினரால் தமிழக மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எட்டு மீனவர்களையும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மீனவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடற்சீற்றம் காரணமாகவே மீனவர்கள் எல்லை தாண்டியதாக எடுத்துரைத்தனர்.
ல்லை தாண்டியதற்காக 8 மீனவர்களையும் நீதிபதி கடுமையாக எச்சரித்தார். அத்துடன் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டால், ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என எச்சரித்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார்.

8 தமிழர்களையும் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம் - Reviewed by Author on December 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.