அண்மைய செய்திகள்

recent
-

மைத்திரியின் அரசியல் சதியால் ஐம்பது நாட்களில் 950 டொலர் மில்லியன் இழந்த இலங்கை -


மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச இணைந்து செய்த அரசியல் சதித் திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தேவை என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கையினை சமர்த்திருந்தார். இதன் போதான விவாதங்கள் நடந்தன. இது குறித்து மன்றில் உரையாற்றிய அமைச்சர் கபீர் ஹாசிம்,
அரசியல் சதித்திட்டத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திசெய்ய இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும். அத்துடன் கடந்த ஐம்பது நாட்களில் 950 டொலர் மில்லியன் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது. இது இவர்கள் நாட்டுக்கு செய்த பாரிய துரோகமேயாகும்.

ராஜபக்ச அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்து வந்தது. இந்த காலப்பகுதியில் 100க்கும் அதிகமான அமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால் இவர்கள் அந்த காலப்பகுதியில் மக்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் சதித்திட்டத்தினால் ஆட்சிக்கு வந்து எரிபொருட்களின் விலை குறைத்தும் சில வரிகளை குறைத்தும் மக்களுக்கு நிவாணம் வழங்கியதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவர்களின் 10வருட ஆட்சியில் எரிபொருட்களின் விலை எந்த இடத்தில் இருந்தது என்பதை மறந்துள்ளனர். அதேபோன்று எரிபொருட்களின் விலையை குறைக்குமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் இவர்கள் மதிக்காமல் செயற்பட்டனர்.
ஆனால் தற்போது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரிவிக்கின்றனர். அதேபோன்று 2015 நாங்கள் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. சைட்டம் பிரச்சினை தீவிரமடைந்திருந்தது என்றார்.
மைத்திரியின் அரசியல் சதியால் ஐம்பது நாட்களில் 950 டொலர் மில்லியன் இழந்த இலங்கை - Reviewed by Author on December 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.