அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்ரிப்பு-படம்

மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்தும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று திங்கட்கிழமை(10) மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

மன்னார் நகர மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் அருட்தந்தை நேரு அடிகளார்,அகில இலங்கை தமிழ்  காங்கிரசின் செயலாளர் செல்வராசா கஜன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவுகள்,தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள்,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

-இதன் போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








மன்னாரில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்ரிப்பு-படம் Reviewed by Author on December 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.