பாலைக்குளி மற்றும் மூங்கில் முறிச்சான் பகுதிகளில் அடாத்தாக பயிர்ச் செய்கை-சட்ட நடவடிக்கைமேற்கொள்ள கோரிக்கை
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலைக்குளி மற்றும் மூங்கில் முறிச்சான் நீரேந்தும் பகுதியில் தனி நபர்கள் இருவர் அடாத்தாக உழவினை மேற்கொண்டு விதைப்பினையும் மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாலைக்குளி கமக்கார அமைப்பு முருங்கன் செம்மண் தீவு நீர் பாசன பொறியியலாளருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலைக்குளி நீரேந்தும் பகுதியில் தனி நபர் ஒருவர் அடாத்தாக உழவினை மேற்கொண்டுள்ளார்.
இதே வேளை இத்திக்கண்டல் விவசாய அமைப்பின் பொருளாளர் மூங்கில் முறிச்சான் நீரேந்தும் பகுதியில் அடாத்தாக உழவினையும் மேற்கொண்டு தற்போது விதைப்பினையும் மேற்கொண்டுள்ளார்.
குறித்த நபர்கள் இரவு நேரங்களில் உழவினை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் அத்து மீறிய செயற்பாடுகளின் காரணமாக குறித்த குளத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நீரை குளத்தில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே அத்து மீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக உடன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாலைக்குளி கமக்கார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
-கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட முருங்கன் செம்மண் தீவு நீர் பாசன பொறியியலாளர் எதிர் வரும் 14 ஆம் திகதிக்குள் அத்து மீறி செயற்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்துள்ளார்.

Reviewed by Author
on
December 11, 2018
Rating:
Reviewed by Author
on
December 11, 2018
Rating:

No comments:
Post a Comment