உலகில் முதன் முறையாக இறந்தவரின் கர்ப்பபை கொண்டு குழந்தை பெற்ற பெண்! -
சர்வதேச அளவில் 500 பேரில் ஒரு பெண் கர்ப்பபை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் 10 முதல் 15 சதவித பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலையில், அவர்களுக்கு கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தைபெறும் வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி ஆகிய நாடுகளில் இறந்த பெண்களிடம் இருந்து தானம் பெற்று 10 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால், அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் பிரேசிலின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழக மருத்துவர் டேன் இஷ்ஜென் பெர்க் தலைமையிலான குழு, கடந்த 2016ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டது.
அதில் வலிப்பு நோயால் இறந்த 45 வயது பெண்ணின் கர்ப்பபை தானமாக பெறப்பட்டு, வேறொரு பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. தற்போது அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தை 2 கிலோ 550 கிராம் எடையுடன் உள்ளது. உலகிலேயே இறந்தவரின் கர்ப்பபை மூலமாக பிறந்த முதல் குழந்தை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் முதன் முறையாக இறந்தவரின் கர்ப்பபை கொண்டு குழந்தை பெற்ற பெண்! -
Reviewed by Author
on
December 06, 2018
Rating:
No comments:
Post a Comment