ஒரே நாளில் 25 முறை மாரடைப்புக்கு உள்ளான பிஞ்சு குழந்தை: பிரித்தானிய மருத்துவர்களை உலுக்கிய சம்பவம் -
பிரித்தானியாவில் ஃபேவ் மற்றும் ஸ்டீவன் தம்பதிகளின் 19 மாத பிஞ்சு குழந்தையே ஒரே நாளில் 25 முறை மாரடைப்புக்கு உள்ளாகி மருத்துவர்களின் தொடர் போராட்டங்களுக்கு முடிவில் அதிசயம் என மீண்டு வந்துள்ளது.
ஃபேவ் மற்றும் ஸ்டீவன் தம்பதிகளுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தியோ என்ற ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்து ஒரு வாரம் கடந்த நிலையில் தூக்கத்தில் இருந்த குழந்தையானது திடீரென்று நீல வண்ணத்திலும் பின்னர் சாம்பல் நிறத்திலும் மாறத் துவங்கியது.
அதிர்ச்சிக்குள்ளான 30 வயது தாயார் ஃபேவ் உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சால்ஃபோர்ட் ராயல் மருத்துவமனைக்கு குழந்தையை அள்ளிச் சென்றனர். அங்கே 40 பேர் கொண்ட மருத்துவக் குழு காத்திருந்தது.
குழந்தை தியோவை பரிசோதித்த மருத்துவர்கள் குழம்பினர். அவர்களால் என்ன நோய் என உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை, இருப்பினும் குழந்தை ஆபத்து கட்டத்தில் இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளனர்.
திடீரென்று குழந்தை தியோவுக்கு மாரடைப்பு எனவும், அறுவை சிகிச்சைக்கு முன்னரே உயிர் பிரிய வாய்ப்பு உள்ளது எனவும் அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சால்ஃபோர்ட் ராயல் மருத்துவமனையில் இருந்து லிவர்பூலில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஆல்டர் ஹேவுக்கு தியோவை அனுமதிக்க பரிந்துரைக்கப்பட்டது.
நான்கு நாட்களுக்கு பின்னர் தியோவுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அறுவை சிகிச்சையின்போதும் தியோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 மாத தீவிர சிகிச்சைக்கு பின்னர் அதே ஆண்டு ஜூலை மாதம் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால் மீண்டும் குழந்தை தியோவின் நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியது. மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
24 மணி நேர தீவிர கண்காணிப்பில் இருந்த குழந்தை தியோவுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 12 நிமிடங்கள் இதயம் ஸ்தம்பித்தது. மருத்துவர்கள் போராடி மீட்டுள்ளனர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த தியோவுக்கு 2018 ஜனவரி 31 ஆம் திகதி மரணத்தை வென்ற நாள் என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த ஒரு நாளில் மட்டும் 25 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அருகாமையில் இருந்த நர்சுகளும் தாயார் ஃபேவ் உள்ளிட்டவர்களுக்கும் அன்றைய நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது.
அடுத்த நாள் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் ரமண தன்னபுனேனி என்பவரால் அறிவுறுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கான நிலையில் அப்போது குழந்தை தியோ இல்லை என்ற போதும், கட்டாயம் அதை நிறைவேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
10 மணி நேரம் நீண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆபத்து கட்டத்தை கடந்ததாக மருத்துவர் ரமணா தெரிவித்துள்ளார்.
தற்போது தியோவுக்கு 19 மாதங்கள் கடந்த நிலையில் ஃபேவ் மற்றும் ஸ்டீவன் தம்பதிகள் தங்களாலான நிதியை திரட்டி தியோ போன்று உயிருக்கு போராடும் பிஞ்சு குழந்தைகளுக்காக உதவி வருகின்றனர்.


ஒரே நாளில் 25 முறை மாரடைப்புக்கு உள்ளான பிஞ்சு குழந்தை: பிரித்தானிய மருத்துவர்களை உலுக்கிய சம்பவம் -
Reviewed by Author
on
January 20, 2019
Rating:
No comments:
Post a Comment