உயர்தர பரீட்சையில் 3A சித்திகளை பெற்ற மாணவன் திடீரென மரணம் -
கடந்த வாரம் வெளியான கபொத உயர்தர பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, பாலதோட்டை, இசுரு உயண பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் உயர்தர மாணவன் பரீட்சை பெறுபேறு வெளியாகுவதற்கு முதல் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் வெளியான பெறுபேறுகளுக்கு அமைய உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
களுத்துறை வித்தியாலயத்தில் ஆரம்ப கற்கைகளை மேற்கொண்ட மாணவன் பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்லூரியில் கற்றுள்ளார்.
அவரது நினைவாக பெற்றோர் நேற்றைய தினம் இரத்த தான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர பரீட்சையில் 3A சித்திகளை பெற்ற மாணவன் திடீரென மரணம் -
Reviewed by Author
on
January 03, 2019
Rating:

No comments:
Post a Comment