அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? நாட்டு வைத்தியம் -
அதில் பொதுவாக ஆரோக்கியம் அன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஒன்று அஜீரணக் கோளாறு.
இது நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். இதனை எளிதில் தடுக்க நம் வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களே போதுமானது. அது என்ன என்பதை பார்ப்போம்.

- 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாற்றினை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து, அத்துடன் தேன் கலந்து, உணவு உண்ட பின் குடித்தால், செரிமான பிரச்சனையைத் தடுக்கலாம்.
- 1 டீஸ்பூன் மல்லியை பொடி செய்து, ஒரு டம்ளர் மோருடன் சேர்த்து கலந்து பருகினால், அஜீரண பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
- செரிமான பிரச்சனை இருப்பது போல் உணர்ந்தால், க்ரீன் டீயைக் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனைக்கு உடனடியாக நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- சீரகத்தை வறுத்து பொடி செய்து, ஒரு டீஸ்பூன் சீரகப் பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.
- ஒரு டம்ளர் நீரில் ஓமத்தை கையால் நசுக்கி போட்டு கலந்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நொடியில் விலகும்.
- மசாலா அதிகம் சேர்த்த உணவுகளை உட்கொண்ட பின், சிறிது சோம்பை வாயில் போட்டு மென்றால், அஜீரண கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
- இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. சிறு இஞ்சி துண்டை உப்பு தொட்டு சாப்பிட்டால், செரிமான அமிலத்தின் உற்பத்தி தூண்டப்பட்டு, அஜீரண பிரச்சனை உடனடியாக குணமாகும்.
- ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 டம்ளர் நீரில் கலந்து பருகினால், செரிமான பிரச்சனையில் இருந்து நீங்கள் நினைப்பதை விட மிகவும் வேகமாக நிவாரணம் கிடைக்கும்.
- அஜீரண கோளாறு இருக்கும் வேளையில், ஒரு டம்ளர் நீரில் புதினா சாற்றினை சேர்த்து கலந்து பருக, உடனே நிவாரணம் கிடைக்கும்.
- ஒரு டம்ளர் மோரில் 2 டீஸ்பூன் கொத்தமல்லி ஜூஸ் சேர்த்து பருகினால், அஜீரண கோளாறில் இருந்து உடனடியாக விடுபட முடியும்.
அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? நாட்டு வைத்தியம் -
Reviewed by Author
on
January 19, 2019
Rating:

No comments:
Post a Comment