அண்மைய செய்திகள்

recent
-

செயற்கையான முறையில் உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை-


Technical University of Munich (TUM) இல் பணியாற்றும் Friedrich Simmel மற்றும் Aurore Dupin ஆகிய விஞ்ஞானிகள் இணைந்து செயற்கையான முறையில் உயிர்க்கலத்தினை உருவாக்கியுள்ளனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட கலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பாடலை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கலங்கள் கொழுப்பு இழையத்தினால் வேறுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இக் கலங்கள் சிறிய இரசாயன சமிக்ஞை மூலம் அதிகளவு சிக்கல்தன்மை வாய்ந்த விளைவை ஏற்படுத்தக்கூடியன.
அதாவது RNA உட்பட ஏனைய சில வகை புரதங்களை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கின்றன.

மேலும் இக் கலங்களின் புறக்கட்டமைப்பானது முப்பரிமாண பிரிண்டரின் உதவியுடன் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செயற்கையான முறையில் உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை- Reviewed by Author on January 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.