31 பிரித்தானியர்கள் உட்பட 60 பேரை சுட்டுக்கொன்ற பயங்கர சம்பவம்!
துனிசியா நாட்டில் கடந்த 2015ம் ஆண்டு பார்டோ தேசிய அருங்காட்சியகம் மற்றும் Sousse கடற்கரை பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் அதிகமாக பிரித்தானிய சுற்றுலா பயணிகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கானது இன்று துனிசியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீர்ப்பினை எதிர்பார்த்து பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் ஆவலுடன் தொலைக்காட்சிகளை காலை முதலே பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், வழக்கில் சம்மந்தப்பட்ட 5 பேருக்கு 6 மாதம் முதல் 6 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 17 பேர் விடுவிக்கப்பட்டதாக வழக்கு விசாரணை செய்தித்தொடர்பாளர் சோபீனி ஸ்லிதி தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ச் மாதத்திற்கு முன்னதாக அருங்காட்சியகத்தில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் இரண்டு துப்பாக்கிதாரிகள், 21 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு துனிசிய பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்மந்தமாக கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கு ஒன்று முதல் 16 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 12 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


31 பிரித்தானியர்கள் உட்பட 60 பேரை சுட்டுக்கொன்ற பயங்கர சம்பவம்!
Reviewed by Author
on
February 09, 2019
Rating:
No comments:
Post a Comment