அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மத்திய வங்கியினால் நினைவாக வெளியிடப்பட்ட 5000. 2000, 1500, 500, 100 ரூபாய் பெறுமதியான நாணயக் குத்திகள்-படங்கள்



இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ரூபா 5000. ரூபா 2000, ரூபா 1500, ரூபா 1000, ரூபா 500, ரூபா 100 நாணயக் குத்திகளைக் கண்டிருக்கிறீர்களா? இதோ உங்களின் பார்வைக்கு......

ரூபா 5000 (Metal: Silver) இலங்கை மத்திய வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 5000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 5000 ( Metal: Gold (22 Carat) இலங்கையின் 50 ஆவது சுதந்திர தினத்தையொட்டி 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 5000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 2000 (Metal: Silver (Selective Gold Plated) புத்த மதத்தின் 2550 வது ஆண்டு நிறைவையொட்டி 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 10000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 2000 ( Metal: Silver) கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1500 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 2000 (Metal: Silver, lamp is gold plated) கொழும்பு- 5 விசாகா கல்லூரியின் 100 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1500 (Metal: Silver ( .925)) புத்த மதத்தின் 2550 வது ஆண்டு நிறைவையொட்டி 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 20000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 (Metal: Silver) இலங்கையின் 50 ஆவது சுதந்திர தினத்தையொட்டி 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 25000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 ( Metal: Silver) இலங்கை 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் உலக கிண்ணத்தை வெற்றி கொண்டதையொட்டி 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 25000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 ( Metal: Silver) இலங்கை மத்திய வங்கியின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 10000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 (Metal: Ni Plated Steel) 2007 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ண ஞாபகர்த்த நாணயக்குத்தி. 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 10000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 ( Metal: Ni Plated Steel) ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1200 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 ( Metal: Ni Plated Steel) ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 100 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 (Metal: Silver) இலங்கை இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 10000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 ((Metal: Cu / Nii) இலங்கை இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 200000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 (Metal: Silver) 2600th Sambuddhathva Jayanthi நினைவாக 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 2000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 (Metal: Gold Plated Silver ) மக்கள் வங்கியின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 2300 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 1000 (Metal: Ni Plated Steel) 60th Anniversary of Sri Lanka - Japan Diplomatic Relations நினைவாக 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 20000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 500 (Metal: Silver ) இலங்கை வங்கியின் 40 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 9800 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 500 (Metal: Gold (12 Carat) ) 5th South Asian Federation Games – Colombo நினைவாக 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 8000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 500 (Metal: Silver ) 2300 Anubudu Mihindu Jayanthi நினைவாக 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 30000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 500 (Metal: Silver ) 150th Birth Anniversary of Srimath Anagarika Dharmapala நினைவாக 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1500 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 500 (Metal: Silver ) 150th Anniversary of Colombo Municipal Council நினைவாக 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 500 (Metal: Silver ) Visit of His Holiness Pope Francis to Sri Lanka நினைவாக 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 1500 குத்திகளே வெளியிடப்பட்டன.
ரூபா 200 (Metal: Silver ) Bicentennial celebrations of Sri Lanka Customs நினைவாக 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 3000 குத்திகளே வெளியிடப்பட்டன.

ரூபா 100 (Metal: Silver) 5th South Asian Federation Games – Colombo நினைவாக 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தமாக 20000 குத்திகளே வெளியிடப்பட்டன.
























இலங்கை மத்திய வங்கியினால் நினைவாக வெளியிடப்பட்ட 5000. 2000, 1500, 500, 100 ரூபாய் பெறுமதியான நாணயக் குத்திகள்-படங்கள் Reviewed by Author on February 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.