அதிர்ச்சி கொடுத்த கூட்டமைப்பு - ரணிலுக்கு ஆதரவு வழங்க முடியாது!
சிறிய கட்சியுடன் இணைந்து ஏற்படுத்தப்படும் தேசிய அரசாங்கத்திற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தென்னிலங்கையில் பரவலான கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமது தரப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தனியான ஒரு உறுப்பினரை இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாம் ஒரு போதும் ஆதரவு முடியாது.
நாடாளுமன்றத்திலுள்ள பெரிய கட்சி ஒன்றுடன் தேசிய அரசாங்கம் அமைத்து, அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பலத்தை ஸ்தீரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை வழங்க நாம் பின்னிற்க மாட்டோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களின் போது பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணிலுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பு மறுப்பு வெளியிட்டிருப்பது கொழும்பு அரசியலில் பேசும் விடயமாக மாறியுள்ளது.
அதிர்ச்சி கொடுத்த கூட்டமைப்பு - ரணிலுக்கு ஆதரவு வழங்க முடியாது!
Reviewed by Author
on
February 06, 2019
Rating:

No comments:
Post a Comment