தொழில்நுட்ப துறைக்கான புதிய கட்டடம் திறப்பு! -
வவுனியா - பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் தொழில்நுட்ப துறைக்கான புதிய கட்டடம் திறக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் p.m.s. குணரத்தின, யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் விக்கினேஸ்வரன் , முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்ப துறைக்கான புதிய கட்டடம் திறப்பு! -
Reviewed by Author
on
February 16, 2019
Rating:

No comments:
Post a Comment