மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் விபத்து- மன்னார் தனியார் பேரூந்தின் உரிமையாளரான விமலதாசன் பலி- மனைவி படுகாயம்-(படம்)
மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி,புதுக்குடியிறுப்பு சந்தி கோணர் பண்ணை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 17-03-2019 மதியம் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளதோடு,அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் ஆண்டாங்குளம் ஆக்காட்டி வெளி கிராமத்தை வதிவிடமாகவும், மன்னார் சாந்திபுரம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட தனியார் பேரூந்தின் உரிமையாளரான வி.விமலதாசன் (வயது-49) என தெரிய வருகின்றது.
-குறித்த குடும்பஸ்தர் மன்னாரில் இருந்து தலை மன்னார் நோக்கி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த போது , தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி பொருட்களுடன் பயணித்த வாகனம் ஒன்று குறித்த மோட்டார் சைக்கிலில் வந்தவர்களுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
-இதன் போது மோட்டார் சைக்கிலில் பயணித்த தனியார் பேரூந்தின் உரிமையாளரான வி.விமலதாசன் (வயது-49) என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலியானதோடு, அவரது மனைவி படுகாயமடைந்தார்.
-உடனடியாக சடலம் மற்றும் படுகாயம் அடைந்த அவரது மனைவி மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, படுகாயமடைந்த அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரனைகளை மன்னார் வைத்தியசாலையின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் ஆண்டாங்குளம் ஆக்காட்டி வெளி கிராமத்தை வதிவிடமாகவும், மன்னார் சாந்திபுரம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட தனியார் பேரூந்தின் உரிமையாளரான வி.விமலதாசன் (வயது-49) என தெரிய வருகின்றது.
-குறித்த குடும்பஸ்தர் மன்னாரில் இருந்து தலை மன்னார் நோக்கி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த போது , தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி பொருட்களுடன் பயணித்த வாகனம் ஒன்று குறித்த மோட்டார் சைக்கிலில் வந்தவர்களுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
-இதன் போது மோட்டார் சைக்கிலில் பயணித்த தனியார் பேரூந்தின் உரிமையாளரான வி.விமலதாசன் (வயது-49) என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலியானதோடு, அவரது மனைவி படுகாயமடைந்தார்.
-உடனடியாக சடலம் மற்றும் படுகாயம் அடைந்த அவரது மனைவி மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, படுகாயமடைந்த அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரனைகளை மன்னார் வைத்தியசாலையின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் விபத்து- மன்னார் தனியார் பேரூந்தின் உரிமையாளரான விமலதாசன் பலி- மனைவி படுகாயம்-(படம்)
Reviewed by Author
on
March 17, 2019
Rating:

No comments:
Post a Comment