மன்னாரில் மதரீதியான பிளவுகளை கண்டித்து சர்வமத மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்-படம்
'மதங்களை கடந்த மனிதத்தை நேசிப்போம்' எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன் கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் தலைமையில் குறித்த அமைதி போராட்டம் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இடம் பெற்று வரும் மத ரீதியான பிணக்குகள் இனியும் வேண்டாம் எனவும் மதம் எனும் அடையாலத்திற்காக எமது உரிமைக்காக நாம் சண்டையிட்டு பிரிந்து விடக்கூடது எனவும் கோரி குறித்த போராட்டம் இடம் பெற்றது.
மன்னார் ,மடு , மாந்தை , முசலி , நானாட்டான் ஆகிய ஐந்து பிரதேசங்களை சேர்ந்த சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி சுமார் 500 ற்கும் மேற்பட்ட மக்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி குறித்த அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுத்தனர்.
ஆண்டாண்டு காலமாக கட்டியெழுப்பப்பட்ட எமது ஒற்றுமை சில மத ரீதியான காரணங்களுக்காக தகர்க்கப்படக் கூடாது எனவும், மத ரீதியான பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் ஏற்படுவது உண்டு.
அதை மதம் சார்ந்தவர்கள் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது நீதிமன்றம் ஊடக தீர்த்துக்கொள்ள வேண்டும் அதை விடுத்து அவ் பிரச்சினையை அடையாலப்படுத்தி மன்னார் மாவட்டத்தை பிரித்து விடாதீர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதே நேரத்தில் மதங்களையும் மதஸ்தலங்களையும் மதிப்போம் , மதங்களை கடந்த மனித விழுமியங்களை மதிப்போம், அன்பு அமைதி , சமாதானம் , நீதியின் பால் ஒன்றிணைவோம் .
மன்னார் மண்ணில் மதங்களிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்போம். காலமாக பேணிவந்த உறவுகளை மத பிரச்சினையால் பிளவுபடுத்தி விடாதீர்கள் என பல்வேறுபட்ட மத ஒற்றுமையை வழியுறுத்தும் வகையிலான வாசகங்களை உள்ளடைக்கிய பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
April 10, 2019
Rating:

No comments:
Post a Comment