வழக்கம் போல கடைசி ஓவரில் வெற்றி பெற்ற சென்னை அணி! -
ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் இன்று மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவிந்திருந்தது. கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 82 ரன்களை குவித்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், ஷர்டுல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி ஆட்டக்காரர்கள் வாட்சன் (6), டூ பிளசிஸ் (24) ஏமாற்றினர். அடுத்து வந்த ராயுடு(5), ஜாதவ் (20),தோனி (16) அடுத்தடுத்து வீழ, இம்முறை சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஜோடி கடைசி கட்டத்தில் கை கொடுத்தனர். இருந்தாலும் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற கட்டத்துக்கு சென்றதால் ஆட்டம் பரபரப்பாக மாறியது.
ஆனால் 19-வது ஓவரில் அபாரமாக அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசினார் ஜடேஜா. இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் எடுக்கப்பட கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் என்ற கட்டத்துக்கு வந்தது. முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி விளாச 19.4 ஓவரில் 162 ரன்களை சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ரெய்னா 58 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
வழக்கம் போல கடைசி ஓவரில் வெற்றி பெற்ற சென்னை அணி! -
Reviewed by Author
on
April 15, 2019
Rating:

No comments:
Post a Comment