மகள் திருமண விவகாரம்:சிறையில் இருக்கும் நளினி எடுத்த முக்கிய முடிவு -
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார் நளினி.
இந்த நிலையில், தற்போது தனது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும், வயதான தனது தாயாரை பார்த்துக்கொள்ள வேண்டும்மென வலியுறுத்தி 6 மாதம் பிணையில் விடுவிக்க வேண்டும்மென கேட்டு இந்திய அரசாங்கத்துக்கு மனு அளித்திருந்தார்.
ஆனால் குறித்த மனு தொடர்பில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு கிடப்பில் இருந்துவந்தது. இந்நிலையில் 45வது நீதிமன்றத்தில் ஏப்ரல் 15 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் தமது சார்பில் தானே ஆஜராகி நளினி வாதாடவுள்ளார் என்கிற தகவல் அவர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.
வாதியே தனது வழக்கில் ஆஜராக சட்டத்தில் இடம்முண்டு. அதன்படியே நளினி தனது பிணை வழக்கில் ஆஜராகவுள்ளார்.
அப்போது தனது மனதில் அழுத்திக்கொண்டுள்ள விவகாரத்தை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகள் திருமண விவகாரம்:சிறையில் இருக்கும் நளினி எடுத்த முக்கிய முடிவு -
Reviewed by Author
on
April 15, 2019
Rating:

No comments:
Post a Comment