மன்னார் நகரில் பல்வேறு இடங்களில் படையினர் கடும் சோதனை-படங்கள்
மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் இன்று திங்கட்கிழமை 29-04-2019 காலை 6 மணி முதல் முப்படையினரும் இணைந்து கடும் சோதனைகளையும்,தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில் இன்று திங்கட்கிழமை 29-04-2019 காலை 6 மணி முதல் பல நூற்றுக்கணக்கான இராணுவம், பொலிஸார், கடற்படையினர் இணைந்து வீதிகளை மறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் வீட்டில் உள்ள உடமைகளை முழுமையாக சோதனைக்கு உற்படுத்தியுள்ளதோடு,வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பரிசீலினை செய்துள்ளனர்.
மேலும் வீதியால் செல்லுபவர்களின் அடையாள அட்டை பரிசீலினை செய்யப்படுவதோடு,மோட்டார் சைக்கில் உள்ளிட்ட ஏனைய வாகனங்களும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிமுனை-உப்புக்குளம் பிரதான வீதியில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் இடம் பெற்று வருகின்றது.
இதனால் குறித்த கிராம மக்களின் இயல்பு நிலை இன்றைய தினம் பாதீக்கப்பட்டுள்ளது.மேலும் மன்னாரில் பல்வேறு கிராமங்களில் சோதனைகளை மேற்கொள்ள படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
April 29, 2019
Rating:
Reviewed by Author
on
April 29, 2019
Rating:

No comments:
Post a Comment