அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்திற்கு ஒரு தொகுதி புதிய வாகன இலக்கத்தகடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன வாகன இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல்.

 வாகன இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல்

மன்னார் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்திற்கு 2026.09.29 ஆம் திகதி ஒரு தொகுதி புதிய வாகன இலக்கத்தகடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்குரிய வாகன இலக்கத்தகடுகளின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் நேரில் வருகை தந்து, தங்களுக்குரிய வாகன இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தேவையான ஆவணங்கள்

1. வாகனப் பதிவுப் புத்தகத்தின் மூலப்பிரதி.

2. வாகனம் லீசிங் நிறுவனத்தில் இருப்பின், இரண்டு மாதங்களுக்குள் லீசிங் நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட வாகனப் பதிவுப் புத்தகத்தின் பிரதியொன்று.

3. வாகன உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை.

4. வாகனத்தின் பழைய இலக்கத்தகடு – உரிமை மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டும்.

5. பழைய இலக்கத்தகடு தொலைந்திருந்தால், அது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூலப்பிரதி.

6. வாகன உரிமையாளர் நேரடியாக வருகை தருதல் கட்டாயமாகும்.

முக்கிய குறிப்பு

மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தும் உரிய முறையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே வாகன இலக்கத்தகடு வழங்கப்படும்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து வாகன உரிமையாளர்களும் உரிய ஆவணங்களுடன் வருகை தந்து தங்களுக்குரிய இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மோட்டார் வாகன திணைக்களம்

மன்னார் மாவட்டம்

திகதி: 2026.09.30











மன்னார் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்திற்கு ஒரு தொகுதி புதிய வாகன இலக்கத்தகடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன வாகன இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல். Reviewed by Vijithan on September 30, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.