ரிசாத், ஹிஸ்புல்லா, அசாத் சாலியின் பதவிகளை பறிக்குமாறு கோரிக்கை -
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்குமாறு ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
இந்த கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் குறித்த ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து, நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குற்பிடத்தக்கது.
ரிசாத், ஹிஸ்புல்லா, அசாத் சாலியின் பதவிகளை பறிக்குமாறு கோரிக்கை -
Reviewed by Author
on
April 29, 2019
Rating:
Reviewed by Author
on
April 29, 2019
Rating:


No comments:
Post a Comment