குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுமி செய்யும் உதவி....
கனடாவுக்கு தனது குடும்பத்துடன் பிரசாந்தி ரஜனிகாந்த் (17) கடந்த 2007-ல் புலம்பெயர்ந்தார்.
இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தினத்தன்று பிரசாந்தியின் குடும்பத்தார் கொழும்பில் உள்ள தனது உறவினர்களுக்கு போன் செய்து அவர்கள் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டார்களா என பதட்டத்துடன் கேட்டுள்ளனர்.
ஆனால் நல்லவேளையாக யாரும் பாதிக்கப்படவில்லை என தெரியவந்தது.
இந்நிலையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்காக GoFundMe இணையதள பக்கம் மூலம் பிரசாந்தி நிதிவசூல் செய்து வருகிறார்.

அவர் வசூலிக்கும் நிதியானது கொழும்பில் உள்ள பொது மருத்துவமனை மற்றும் அசிரி மருத்துவமனைக்கு செல்லும்.
அசிரி மருத்துவமனையில் தான் பிரசாந்தியின் உறவினர் மருத்துவராக பணிபுரிகிறார்.
இது குறித்து பிரசாந்தி கூறுகையில், என்னால் என்ன முடியுமோ அதை செய்கிறேன், அது தான் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வசூலிப்பது.
குண்டுவெடிப்பில் என்னுடன் முன்னர் படித்தவர்கள் இறந்தார்களா என எனக்கு தெரியவில்லை என கூறினார்.
பிரசாந்தியின் தாய் வனிதா கூறுகையில், என் மகளை நினைத்தால் பெருமையாக உள்ளது. பிரசாந்தி குழந்தையாக இருக்கும் போது இலங்கையில் இருந்து நாங்கள் கனடாவில் குடிபெயர்ந்தோம்.
ஆனால் அந்த வலியை தற்போது அவள் உணர்ந்திருக்கிறாள் என கூறியுள்ளார்.
பிரசாந்தி நிதியுதவி வசூலிக்கும் நிலையில் அவரின் தோழி கரிஷ்மா சுந்தர்ராஜனும் அவருக்கு உதவியாக உள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்பு செய்தி கேட்டு தான் மிகவும் உடைந்து போன நிலையில் கரிஷ்மா தான் எனக்கு ஊக்கமளித்து நிதியுதவி பெறுவதில் பெரும் உதவியாக இருந்தார் என பிரசாந்தி கூறுகிறார்.
சிறுவயதில் கொழும்பில் உள்ள செண்ட் அந்தோணியார் தேவாலயத்துக்கு பிரசாந்தி சென்றுள்ளார்.
அந்த இடம் மிகவும் அழகாக இருக்கும் என கூறிய பிரசாந்தி, அங்கு தாக்குதல் நடத்தப்பட்டதால் அதன் அழகு மற்றும் பிரமிப்பு என்றும் மாறாது என கூறியுள்ளார்.
பிரசாந்தியின் குடும்பம் ஹிந்துவாக இருந்தாலும் அந்தோணியார் தேவாலயங்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் சென்று பிரார்த்தனை செய்வதை முன்னர் வழக்கமாக கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுமி செய்யும் உதவி....
Reviewed by Author
on
April 27, 2019
Rating:
No comments:
Post a Comment