பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? போட்டியில் இருக்கும் 8 பேர் இவர்கள் தான் -
பிரித்தானிய பிரதமர் தெரசா மே கடந்த வாரம் வரும் ஜூன் 7-ம் திகதி தனது கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இதுவரை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள் இணைந்துள்ளனர்.
நாட்டின் முன்னாள் வெளியுறவு செயலர் மோரிஸ் ஜான்சனின் பெயர் தான் இந்த பட்டியிலில் முதலில் உள்ளது.
அதே போல பிரித்தானிய சுற்றுசூழல் செயலர் மைக்கேல் கோவும் இந்த போட்டியில் இணைந்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்த நாட்டின் பிரதமராக இருப்பதற்கு என் பெயரை முன்வைப்பேன் என்பதை உறுதிப்படுத்தி கொள்கிறேன்.
நான் கன்சர்வேடிவ் மற்றும் யூனியன் கட்சியை ஒன்றினைக்க தயாராக உள்ளதாக நம்புகிறேன் என கூறினார்.
இதோடு முன்னாள் பிரக்சிட் செயலர் டோமினி ராப், முன்னாள் காமன்ஸ் தலைவர் ஆண்ட்ரியா லீட்சம் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
மேலும், பிரித்தானிய வெளியுறவு செயலர் ஜெரிமி ஹண்ட், சர்வதேச வளர்ச்சியாக்கம் செயலர் ரோரி ஸ்டீவர்ட், சுகாதார செயலர் மட் ஹன்காக், முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மெக்வே ஆகியோரும் தலைமை பொறுப்பை ஏற்கும் போட்டியில் உள்ளனர்.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? போட்டியில் இருக்கும் 8 பேர் இவர்கள் தான் -
Reviewed by Author
on
May 28, 2019
Rating:

No comments:
Post a Comment