உலகக்கோப்பையில் மீண்டும் இது நடக்கும்: லசித் மலிங்கா நம்பிக்கை -
மூன்றாவது முறையாக உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள மலிங்கா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சகநாட்டு வீரரான ஜெயசூர்யாவுக்கு இணையான ஒருநாள் விக்கெட் வீழ்த்தியவர் எனும் பெருமையைப் பெறுவார்.
கடந்த 2007-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளில் 4 விக்கெட்டை மலிங்கா வீழ்த்தி சாதனை படைத்தார். அதுபோன்ற சாதனையை இந்த உலகக்கோப்பையிலும் செய்வேன் என்று மலிங்கா தெரிவித்துள்ளார்.
மேலும் மலிங்கா கூறியதாவது, ஏன் என்னால் இந்த உலகக்கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த முடியாது என்று நினைக்கிறீர்களா? நான் இந்த முறையும் முயற்சிப்பேன். ஒருவேளை ஹாட்ரிக் எடுத்துவிட்டால் அது சிறப்பானதாக இருக்கும்.
இங்கிலாந்தில் வெயில், குளிர் எதுவாக இருந்தாலும், ஒருபந்துவீச்சாளருக்கு உண்மையான சோதனை சூழலுக்கு ஏற்றார்போல் எவ்வாறு பந்துவீசுகிறார்கள் என்பதுதான். எனக்கு விக்கெட்டுகள் வீழ்த்தும் திறமை இருக்கிறது, நம்பிக்கையும் இருக்கிறது என மலிங்கா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பையில் மீண்டும் இது நடக்கும்: லசித் மலிங்கா நம்பிக்கை -
Reviewed by Author
on
May 28, 2019
Rating:
Reviewed by Author
on
May 28, 2019
Rating:


No comments:
Post a Comment