மன்னாரில் தொழிலாளர் தினம் மிக எளிமையான முறையில் மத வழிபாட்டுடன் நடைபெற்றது.
மன்னார் பகுதியில் இம் முறை இறை வழிபாட்டுடன் மட்டுமே மிக எளிமையான முறையில் தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையானது இவ் தினத்தை தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித.சூசையப்பரை நினைவு கூர்ந்தே இவ் விழாவை வெகு விமரிசையாக ஒவ்வொரு கத்தோலிக்க பங்குகளிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அவரவர் தொழில் உபகரணங்கள் ஆசீர்வதிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழமையாகும்.
அத்துடன் இவ் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் அவரவர் கிராமிய கலாச்சாரத்துக்கேற்ப விளையாட்டு நிகழ்வுகளையும் நடாத்தி வருவது கடந்தகால வழமையாகும்.
ஆனால் இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் எவ்வித விளையாட்டு நிகழ்வுகளோ ஆடம்பர நிகழ்வுகளோ பெருமபாலும் தவிர்க்கப்பட்ட நிலை காணப்பட்டது.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும்
பகுதிகளில் திருப்பலிகள் கடற்கரைப் பகுதிகளிலே ஒப்புக்கொடுக்கப்பட்டு
கடலில் புனித சூசையப்பர் திருச் சுரூபம் படகுகளில் எடுத்துச்
செல்லப்பட்டு கடல் மற்றும் கடலிலுள்ள மீன்பிடி உபகரணங்கள் ஆசீர்வதிக்கும் நிகழ்வுகள் இடம்பெறுவதும் வழமையாகும்.
ஆனால் இம்முறை பாதுகாப்பு கருதி இவ் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு காலையில் ஆலயங்களில் பலத்த பாதுகாப்புடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதையும் அத்துடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீனவர்கள் செறிந்து வாழும் வங்காலை, பேசாலை மீனவ கத்தோலிக்க சமூகம் திருப்பலிக்குப் பின் அயலிலுள்ள கடற்கரைக்கு திருச்சுரூபத்தை எடுத்துச் சென்று கடல் மற்றும் பொதுவான ஒரு இடத்தில் வைக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆசீர்வதிக்கப்படும் நிகழ்வுகளும் இடம்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
May 01, 2019
Rating:
Reviewed by Author
on
May 01, 2019
Rating:

No comments:
Post a Comment