நாட்டில் சட்டம் ஒழுங்கு இனிவரும் நாட்களில் கடுமையாக இருக்கலாம்!
நாட்டில் சட்டம் ஒழுங்கு இனிவரும் நாட்களில் கடுமையாக இருக்கலாம்!
1. உங்கள் அடையாள அட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். காரியாலய அடையாள அட்டையும் இருப்பது உகந்தது. அது உங்களை அந்த பிரதேசத்தில் வதிபவராக அடையாளப்படுத்தும்.
2. யாருக்கும் தெரியாமல் குப்பைகளை வீதியில் இரவில் கொண்டு போய் வைப்பது போன்றவற்றை தவிருங்கள்.
3. காப்புறுதி புதுப்பிக்கப்படவில்லை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை போன்ற காரணங்களுக்காக நிறுத்தாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம். உங்களை சுடுவதற்கும் அனுமதி இருக்கிறது.
4. இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் பதிவுகள், பின்னூட்டங்களை தவிருங்கள்.
5. சந்தேகப்படும் பொதிகள் இருந்தால் தயங்காமல் அறிவியுங்கள். அதில் குண்டு இல்லை என்பதற்காக எல்லாம் நீங்கள் கைதுசெய்யப்பட மாட்டீர்கள்.
6. உங்களை யாராவது சந்தேகமாக பார்த்தால் சண்டைக்கு செல்லாதீர்கள். ஒவ்வொருவரும் உயிர் பயத்தில் இருப்பதை உணருங்கள்.
7. உங்கள் பெயர்களிலுள்ள நீங்கள் பாவிக்காத சிம் கார்டுகளை அத்தனை சேவை வழங்குனரிடமும் சென்று பரிசோதித்து துண்டியுங்கள்.
8. வாகனங்கள் வாங்கி விற்கும்போது உரிமையை உடனுக்குடன் மாற்றிக்கொளுங்கள். காணாமற்போன வாகனங்களை முதல் வேலையாக முறைப்பாடு செய்துவிட்டு பின்னர் தேடுங்கள். முறைப்பாட்டு பிரதி மிக முக்கியமான ஒன்று.
9. பொது இடங்களில் கூட்டமாக நிற்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பயணங்களை காரணங்களுடன் அமைத்துக்கொள்ளுங்கள். 'சும்மா நின்றேன்' போன்ற பதில்கள் பாரிய விளைவுகளை கொண்டுவரும்.
10. உங்களுக்கு தெரியாத நபர்களை வாகனங்களில் ஏற்றி செல்வதை தவிருங்கள்.
11.தெரியாத நபர்களிடமிருந்து பொதிகளை வாங்குதல்,அவற்றை கொண்டு செல்வதை தவிருங்கள்.
12.நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி செல்லும் போது அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஆவணங்கள் ,தொலைபேசி எண்ணினை காட்சிப்படுத்தி செல்லுங்கள்.
13.வாகனங்களை நிறுத்தி வைத்த பின் எடுத்துச் செல்லும் போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்!
14.உறுதிப்படுத்தாத செய்திகள்,மக்களை பதற்றத்திற்குட்படுத்தும் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடல்,மற்றும் பொது வெளியில் பேசும் கருத்துக்களில் அவதானமாக இருங்கள்!
15.பரீட்சையமற்ற நபர்களுக்கு வீடுகளை வாடகை கொடுத்தல், அறிமுகமற்ற நபர்களின் நடமாட்டம் தொடர்பாகவும் அவதானமாக இருங்கள்!
நிலமையை கருத்திற்கொண்டு உங்கள் பயணங்களை தீர்மானியுங்கள்.உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்!
நாட்டில் சட்டம் ஒழுங்கு இனிவரும் நாட்களில் கடுமையாக இருக்கலாம்!
Reviewed by Author
on
May 01, 2019
Rating:
Reviewed by Author
on
May 01, 2019
Rating:


No comments:
Post a Comment