மடுவில் பலத்த பாதுகாப்பு. பக்தர்களுக்கு அசௌரியங்கள் ஏற்படாவண்ணம் கவனிக்கும்படியும் பொலிசாரிடம் வேண்டுகோள்....
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மடு ஆலய பெருவிழாவை முன்னிட்டு 300 பொலிசாரும் 25 அதிரடி பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள மருதமடு ஆலய பெருவிழாவுக்கான ஆயத்த நாள் கடந்த 23 ந் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2 ந் திகதி காலை பெருவிழா திருப்பலி நடைபெறுகின்றது.
கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று ஆலயங்களில் இடம்பெற்ற அனர்த்தத்தின் காரணமாக இவ் முறை மடு ஆலய விழாவுக்கு பலத்த பாதகாப்பு இடப்பட்டுள்ளது. இவ் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடாக 300 பொலிசாரும் 25 அதிரடி பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் ஆலய வளாக நுழைவாயல்களில் ஐந்து சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக இது விடயமாக நடைபெற்ற கூட்டத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வியாழக் கிழமை (27) மடு ஆலய பரிபாலகர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றஇவ் கூட்டத்தில் கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் இங்கு கருத்து தெரிவிக்கையில் பாதுகாப்பை பலப்படுத்தும் இதே சமயம் விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் சோதனை சாவடிகளில் அசௌரியங்களை எதிர்நோக்கா வண்ணம் பார்த்துக் கொள்ளும்படியும் பொலிஸ் அதிகாரிகளை
வேண்டியுள்ளனர்.

Reviewed by Author
on
June 30, 2019
Rating:

No comments:
Post a Comment