கிளிநொச்சியில் சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு -
கிளிநொச்சியைச் சேர்ந்த 13073 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று பகல் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வின் முதல் கட்டமாக 4500 பேருக்கு உரித்துப் படிவம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏனையவர்களுக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக உரித்துப் படிவம் வழங்கி வைக்கப்படும் என சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலூட்டல் அமைச்சர் தயாகமகே, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, கிளிநொச்சி சமூர்த்தி பணிப்பாளர் ஆரனி தவபாலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சியில் சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு -
Reviewed by Author
on
June 03, 2019
Rating:

No comments:
Post a Comment