தலைமன்னாரில் ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று மீனவர்கள் கைது...
தலைமன்னார் கிராம கடற்கரையை வந்தடைந்த படகு ஒன்றை பரிசோதித்த கடற்படையினர் ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று மீனவர்கள் கைது செய்து தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 23.06.2019 அன்று தலைமன்னார் கிராமத்தின் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினர் கடற்கரையை வந்தடைந்த படகு ஒன்றை சந்தேகத்தில் பரிசோதனை செய்தபோது 50 கிராம் 75 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் போதைப் பொருளையும் தலைமன்னார் கடற்படையினர் தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல்ல வீரசிங்கவின் ஆலோசனைக்கிணங்க தலைமன்னார் பிரதான பொலிஸ் அதிகாரி உடகந்த தலைமையில் பொலிஸ் அதிகாரி அன்வர் இது விடயமாக புலன் விசாரணையை மேற்கொண்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஐராக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Reviewed by Author
on
June 25, 2019
Rating:

No comments:
Post a Comment