இலங்கையில் தமிழர்களின் சனத்தொகை விகிதம் சரிந்தது! நாடாளுமன்றத்தில் அடிக்கப்பட்ட அபாய எச்சரிக்கை -
இலங்கையில் சிங்களவர்களினதும் முஸ்லிம்களினம் சனத் தொகை வீதம் அதிகரித்துவரும் நிலையில், தமிழர்களின் சனத்தொகை வீதமே வேகமாக வீழ்ச்சியடைந்து செல்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் சனத் தொகை தொடர்பாக அதிகம் பேசப்பட்டுவருகின்றன. முஸ்லிம்களின் சனத்தொகை அதிகம் என அச்சம் வெளியிடப்பட்டுவருகின்றது. ஆனால் இலங்கையில் முதலாவது குடிசன மதிப்பீடு 1881ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அன்று சிங்களவர்களின் சனத்தொகையானது 66.5 வீதமாக அருந்தது.
அதேவேளை, தமிழர்களின் சனத்தொகை வீதமான 24 இலும், முஸ்லிம் மக்களின் சனத்தொகை வீதமானது 7.2 வீதத்திலும் இருந்தது.
ஆனால் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் படி, சிங்களவர்களின் வீதம் 74.9 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் வீதம் 9.7 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழர்களின் சனத்தொகை வீதமோ 24 இலிருந்து 16 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
இக்கணக்கெடுப்பின்படி 2017ஆம் ஆண்டில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள சனத்தொகை வித்தியாசம் 134 இலட்சமாகும். எனவே இந்த நாடு முஸ்லிம் நாடாகும் என்று கூறும் கருத்தானது அபத்தமானது.
எனினும் பிள்ளை பெறுவதில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முஸ்லிம்களின் விகிதம் அதிகமாகும். முஸ்லிம் பெண்கள் கல்வி கற்காமல் இருப்பதும் தொழிலுக்குச் செல்லாமல் இருப்பதுமே இதற்கான காரணமாகும். கல்வி அறிவுடைய பெண்கள் அதிகளவான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதில்லை என்றார்.
இலங்கையில் தமிழர்களின் சனத்தொகை விகிதம் சரிந்தது! நாடாளுமன்றத்தில் அடிக்கப்பட்ட அபாய எச்சரிக்கை -
Reviewed by Author
on
June 30, 2019
Rating:

No comments:
Post a Comment