பிரபல காமெடி நடிகரின் வாழ்க்கையில் வந்த சோகம்! சொத்துக்களை விற்ற பரிதாபம்
தமிழ் படங்களில் பல காமெடிகாட்சிகளில் நாம் கிருஷ்ண மூர்த்தி என்பவரை பார்த்திருப்போம். வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருப்பவர். இன்னும் சொல்லப்போனால் வடிவேலு உருவாக்கிய காமெடியன்களில் இவரும் ஒருவர். குழந்தை இயேசு படத்தில் தொடங்கி 100க்கு அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.
50 க்கும் அதிகமான படங்களில் புரொடக்ஷன் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கைதி, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் சினிமாவிற்கு வந்து 37 வருடங்கள் ஆகிவிட்டது. வருமானம் தொடர்பான பிரச்சனைகள் இயல்பாக இருக்கும் ஒன்று தான். அவங்க அவங்களுக்கு தகுந்தது போல கஷ்டங்கள் இருக்கும். என் தகுதிக்கான கஷ்டம் எனக்கு.
55 வயதான எனக்கு உடல் நலப்பிரச்சனைகள் இருக்கு. கொழுப்பு அதிகமாக இருந்ததாக ஆப்ரேசன் பண்ணேன். அத ஏன் செய்தோம் என இப்போ ஃபீல் பன்றேன்.
நிறைய சொத்துக்கள் சேர்த்தேன். எல்லாவற்றையும் இழந்தேன். இரண்டு வீடுகள் வைத்திருந்தேன். தொழில் விசயத்தால அதுவும் போச்சு. இப்போ வாடகை வீட்ல இருக்கேன்.
நமக்கு என்ன விதி போடப்பட்டிருக்கோ, அது தான் நடக்கும். நைட்டு 12 மணிக்கு போனா தான் தெரியும் பிளாட்பாரத்துல் எத்தனை பேரு படுத்து தூங்குறாங்கனு. நாம பரவயில்லை என கூறியுள்ளார்.
பிரபல காமெடி நடிகரின் வாழ்க்கையில் வந்த சோகம்! சொத்துக்களை விற்ற பரிதாபம்
Reviewed by Author
on
July 13, 2019
Rating:

No comments:
Post a Comment