அதிகமுறை திருமணம் செய்து கொண்ட இந்த பிரபல நடிகர்களை தெரியுமா?
சஞ்சய் தத்
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிகை ரிச்சா சர்மாவை 1987-ல் மணந்தார். ரிச்சா 1996-ல் மறைந்த பின்னர் ரியி பிள்ளை என்ற பெண்ணை சஞ்சய் 1998-ல் மணந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்த சஞ்சய் தத் நடிகை மன்யதாவை 2008-ல் திருமணம் செய்து கொண்டார்.இதற்கடுத்தும் நடிகை ரேகாவை அவர் நான்காவதாக திருமணம் செய்தார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதை அவர் மறுத்துவிட்டார்.

கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் வாணி கணபதி என்ற பரதநாட்டிய கலைஞரை 1978-ல் மணந்தார். 1988-ல் அவரை விவாகரத்து செய்த கமல் அதே ஆண்டில் சரிகாவை திருமணம் செய்தார்.பின்னர் சரிகாவை விவாகரத்து செய்த கமல் நடிகை கவுதமியுடன் வாழ்ந்தார்.
கவுதமியை கமல் திருமணம் செய்து கொண்டாரா என வெளியில் தெரியாத நிலையில் கடந்தாண்டு அவரை கமல் பிரிந்துவிட்டார்.

ஜெமினி கணேசன்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்த ஜெமினி கணேசன் நான்கு முறை திருமணம் ஆனவர் ஆவார். இவரின் முதல் மனைவி பெயர் அலமேலு, இரண்டாம் மனைவி பெயர் புஸ்வவல்லி.மூன்றவதாக நடிகை சாவித்ரியை மணந்த ஜெமினி தனது 78வது வயதில் ஜூலியானா என்ற பெண்ணை நான்காவதாக மணந்தார்.

கபீர் பேடி
பிரபல இந்தி நடிகர் கபீர் பேடி நான்கு திருமணம் செய்து கொண்டவர் ஆவார். ஒடிசா பெண்ணான ப்ரோடிமாவை முதல் திருமணம் செய்த கபீர், பின்னர் பிரித்தானிய பெண் சுசனை இரண்டாவது திருமணம் செய்தார்.அவரை விவாகரத்து செய்த பின்னர் நிக்கி என்ற பெண்ணை திருமணம் செய்த கபீல் அவரையும் கடந்த 2005ல் விவாகரத்து செய்தார்.
இதையடுத்து 2016-ல் பர்வீன் துசன்ஜ் என்ற பெண்ணை கபீர் தனது 70-வது வயதில் மணந்தார்.

சித்தார்த் ராய் கபூர்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சித்தார்த் மூன்று பெண்களை திருமணம் செய்தவர் ஆவார்.சிறுவயது தோழியை முதல் திருமணம் செய்து கொண்ட அவர் பின்னர் அவரை பிரிந்து தொலைக்காட்சி தயாரிப்பாளரை இரண்டாவதாக மணந்தார்.
அவரையும் 2011-ல் விவாகரத்து செய்த சித்தார்த் 2012-ல் பிரபல நடிகை வித்யா பாலனை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

கரண் சிங்
நடிகர் கரண் கடந்த 2008-ல் டிவி நடிகை ஷரதா நிகமை முதல் திருமணம் செய்தார். பின்னர் அவரை 2008-ல் விவாகரத்து செய்த பின்னர் நடிகை ஜெனிபரை இரண்டாவதாக மணந்தார்.அவரையும் பிரிந்த கரண், கடந்த 2014 முதல் கவர்ச்சி நடிகை பிபாசா பாசுவுடன் டேட்டிங் சென்றார்.
இதையடுத்து கடந்த 2016-ல் பாசுவை கரண் மூன்றாவதாக மணந்தார்.

அதிகமுறை திருமணம் செய்து கொண்ட இந்த பிரபல நடிகர்களை தெரியுமா?
Reviewed by Author
on
August 12, 2019
Rating:
No comments:
Post a Comment