த.தே.கூட்டமைப்பின் தலைமை விட்ட தவறுகளே இதற்கு காரணம் : சிவசக்தி ஆனந்தன் -
இளைஞர், யுவதிகள் எமது அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி முன்வரவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி அலுவலக திறப்பு விழாவிலும் அக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றஇளைஞர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டியிலும் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகளுக்கு வேலை இல்லாத பிரச்சனை என்பது பாரிய பிரச்சனை. ஆனால் எங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பங்களில் எவ்வளவு தூரம் நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம் என்பது தொடர்பில் விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டு என்பது எங்களுக்கு கிடைத்த ஒரு பொற்காலம். இந்த நான்கு வருடகாலம் எங்களுடைய மக்களினுடைய அரசியல் உரிமைக்காக அல்லது எங்களுடைய இளைஞர், யுவதிகளுடைய வேலை வாய்ப்புக்காக அல்லது போரால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த மக்களுடைய விடுதலைக்காக எவ்வளவு தூரம் காத்திரமாக எங்களுடைய தமிழ் தலைமைகள் ராஜதந்திர ரீதியாக நடந்து இருக்கிறார்கள் என்பது பல்வேறு பட்ட விமர்சனத்துக்கு உட்பட்ட பிரச்சனையாக இருக்கிறது.
மீண்டும் உரிமைகளை வென்று எடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இன்னும் நான்கு மாத காலத்திலே ஒரு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த ஜனாதிபதி தேர்தல் தமிழர்களுடைய கையிலே தான் நாங்கள் அளிக்க போற ஜனநாயக ரீதியான இந்த வாக்குரிமை தான் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்க இருக்கிறது.
ஆகவே அந்த சந்தர்ப்பத்தை எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகின்றோம் என்பது சவாலாகும். பல்வேறுபட்ட கூறுகளாக இருக்கக்கூடிய நாங்கள் குறைந்த பட்சம் இந்த ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகள் மத தலைவர்கள் சிவில் அமைப்புகள் இளைஞர்கள் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து கடந்த அறுபது எழுபது வருட காலமாக இந்த நாட்டை ஆட்சி செய்த அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த அட்டூழியங்களில் இருந்து மீண்டெழ வேண்டுமாக இருந்தால் நாங்கள் ஒரு சரியான காத்திரமான முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் இரண்டாயிரத்தி பதினைந்து என்பது எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம். அங்கே எந்தவிதமான நிபந்தனைகள் மட்டுமல்லாமல் ஆட்சி மாற்றம் வரும் பணத்துக்கான ஒரு ஆட்சி மாற்றமாக தான் அது நடைபெற்றது.
எனவே ஒரு சில கட்சிகளையும் ஒரு சில நபர்களையும் அவர்களுடைய அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டே அந்த ஆட்சி மாற்றமாக நடைபெற்றிருக்கிறது.
இந்த நான்கு வருட காலமும் அதை சரியான முறையிலே அதை பயன்படுத்த தவறி இருக்கிறார்கள். ஆகவே இன்றைக்கு எங்களுக்கு முன்னால் இருக்கக்கூடிய பல பிரச்சனைகள் பல பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான் இன்றைக்கு விக்னேஷ்வரனுடைய தலைமையில் இருக்கக்கூடிய நாங்கள் மற்றும் எங்களை போன்ற தோழமை கட்சிகள் அதே மாறி தமிழ் மக்கள் கூட்டணியுடைய கட்சியினுடைய உறுப்பினர்களிடமும் பகிரங்கமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சியினுடைய கொள்கை ஏற்றுக்கொண்டு செல்லக்கூடிய பல்வேறுபட்டவர்களும் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. ஆகவே நாங்கள் மாற்று ஒரு தலைமைக்கான இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டமை தமிழ் தேசிய கூட்டமைப்புடைய தலைமை கடந்த காலத்திலே விட்ட தவறுகளும் தற்போது விட்டு கொண்டிருக்கிற இந்த தவறுகளை தான் இன்றைக்கு நாங்கள் ஒரு மாற்று தலைமை நோக்கி செல்ல வேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை ஒன்று தேவை. அது விக்னேஷ் வரனுடைய தலைமையில் தான் வடக்கிலே கிழக்கிலே பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் புத்திஜீவிகள் பல்வேறு பட்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நாங்கள் தமிழ் மக்களினுடைய அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கும் தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சனைகளுக்கான தீர்வு காணுவதற்காக இது தான் எங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு இறுதி சந்தர்ப்பம்.
ஆகவே இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே இளைஞர் யுவதிகள் எமது அரசியல் உரிமை மற்றும் பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
த.தே.கூட்டமைப்பின் தலைமை விட்ட தவறுகளே இதற்கு காரணம் : சிவசக்தி ஆனந்தன் -
Reviewed by Author
on
August 12, 2019
Rating:

No comments:
Post a Comment