செல்ல நாயை ஆசையுடன் முத்தமிட்ட பெண்மணியின் கை கால்கள் வெட்டி நீக்கப்பட்ட சம்பவம்
வெளிநாட்டில் விடுமுறையை கழித்துவிட்டு ஒகையோ மாகாணத்தின் ஸ்டார்க் கவுண்டி பகுதியில் உள்ள குடியிருப்புக்கு திரும்பியிருந்தார் Marie Trainer என்ற பெண்மணி.
குடியிருப்புக்கு திரும்பியதும், சில நாட்களாக பிரிந்திருந்த தமது செல்ல நாயை அள்ளியெடுத்து முத்தம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த சில தினங்களில் அவருக்கு முதுகுவலி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மயக்கமிட்டு விழுந்த அவரை மீட்டு ஸ்டார்க் கவுண்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
தொடர்ந்து 9 நாட்கள் சிகிச்சையில் இருந்து கண்விழித்த மேரிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது கை, கால்கள் வெட்டி நீக்கப்பட்டது தெரியவந்தது.
மயக்கமிட்ட நிலையில் மேரியை மருத்துவமனையில் சேர்ப்பித்த பின்னர், அவருக்கு என்ன நோய் என்பதை கண்டறிய மருத்துவர்களுக்கு 7 நாட்களாகியுள்ளது.

இதனிடையே அவரது நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அதனாலையே அவரது கை, கால்களை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேரி, விடுமுறையில் இருந்து திரும்பியதும் அவரது ஜேர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டியை முத்தமிட்டதாக கூறப்படுகிறது.
அந்த நாயில் இருந்தே மேரியின் வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப்போட்ட கிருமித் தொற்று பாதித்துள்ளது.
இதுவரை மேரிக்கு 8 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உயிரை காப்பாற்றுவதே பெரும் போராட்டமாக இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்ல நாயை ஆசையுடன் முத்தமிட்ட பெண்மணியின் கை கால்கள் வெட்டி நீக்கப்பட்ட சம்பவம்
Reviewed by Author
on
August 05, 2019
Rating:
No comments:
Post a Comment