பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் அதிசய கிராமம்: ஆண் குழந்தைக்காக ஏங்கும் மக்கள் -
போலந்து நாட்டில் நடைபெற்ற ஜூனியர் தீயணைப்பு வீரர்களுக்கான போட்டியின் போது, சிறிய கிராமமான மிஜ்ஸ் ஓட்ரான்ஸ்கி கிராமத்தில் இருந்து பெண்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
முதலில் இதனை அசாதாரணமாக நினைத்த போட்டியாளர்கள் அதன்பின்னரே அந்த கிராமத்திற்கான விசித்திரத்தை புரிந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் ஆண் குழந்தையே பிறக்கவில்லை. மாறாக பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இதனால் அவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கு என்ன காரணம் என தெரியாமல் அந்த கிராமத்து மக்கள் திகைத்து போயுள்ளனர். இதுசம்மந்தமாக ஆராய்ச்சி செய்வதற்கு மருத்துவர்களுக்கும் மேயர் அனுமதி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள மேயர், எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இரண்டு பேருமே பெண் குழந்தைகள் தான். பக்கத்து வீட்டை சேர்ந்த நபருக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் என நினைத்த போது, அவர்களுக்கும் பெண் குழந்தைகளே பிறந்துள்ளனர்.
அடுத்ததாக 'ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் தம்பதியினருக்கும், குழந்தைக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த பரிசு வழங்கப்படும்' என அறிவித்துள்ளார்.

பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் அதிசய கிராமம்: ஆண் குழந்தைக்காக ஏங்கும் மக்கள் -
Reviewed by Author
on
August 12, 2019
Rating:
No comments:
Post a Comment