தெற்கு கலிபோர்னியா-வணிக கப்பலில் தீ விபத்து: 5 பேர் மீட்பு... 34 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்! -
சாண்டா பார்பரா கடற்கரையில் சாண்டா குரூஸ் தீவுக்கு அருகே வணிக கப்பல் ஒன்றில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த கப்பற்படையினர், கப்பலில் சிக்கியிருந்த 5 பேரை பத்திரமாக மீட்டெடுத்தனர். அதில் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் கப்பலில் இருந்த மற்ற 34 பேர் மாயமாகியுள்ளதால் அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரி ஐடன் கூனி கூறுகையில், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இப்போது நாங்கள் பேச முடியாது. நிலைமை இன்னும் தொடர்கிறது. இதுவரை மீட்கப்படாத 29 பேர் குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. "எங்களிடம் உள்ள கடைசி தகவல் என்னவென்றால், அவர்கள் இன்னும் கப்பலில் உள்ளனர்." என்பது மட்டும் தான்.

வென்சுரா கவுண்டி தீயணைப்புத் துறை கேப்டன் பிரையன் மெக்ராத் கூறுகையில், கப்பலில் இறப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதில் இருந்தவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஒரு சில பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.


தெற்கு கலிபோர்னியா-வணிக கப்பலில் தீ விபத்து: 5 பேர் மீட்பு... 34 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்! -
Reviewed by Author
on
September 03, 2019
Rating:
No comments:
Post a Comment