அமெரிக்காவில் உதவி சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை பெண் -
"இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பெண் ஒருவர் அமெரிக்காவின் மினசோட்டா பிராந்தியத்தில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு மிகப்பெரிய கௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதவியில் மினசோட்டா பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கை பெண் போட்டியிடுகிறார்.
கம்பஹா, மாதெல்கமுவ, பட்டபொத்த பிரதேசத்தை சேர்ந்த நிலுஷி ரணவீர என்பவரே நியமிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா ஸ்ரீ குருச வித்தியாலயத்தில் கற்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பிரிவில் இணைந்து 2005ஆம் ஆண்டு பட்டம் பெற்று அமெரிக்கா சென்றார். அமெரிக்காவிற்கு சென்றவர் 2006ஆம் ஆண்டு மினசோட்டா பிராந்தியத்தின் ஹெம்லின் பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டதாரியாக பட்டம் பெற்றார்.
பின்னர் அவர் அரச நீதிபதியின் கீழ் குற்ற சட்டத்தின் கீழ் கற்ற நிலுஷி கடந்த 23ஆம் திகதி மினசோட்ட பிராந்தியத்தில் உதவி சட்டதரணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உதவி சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை பெண் -
Reviewed by Author
on
September 03, 2019
Rating:

No comments:
Post a Comment