தேர்தலுக்காக நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் தலைவர்கள் -
தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாக முடியாத சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுவார்களாயின், நீதிமன்றம் சென்று அதனை முறியடிப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றிற்கு இன்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முறையை ஒழிப்பதாயின், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அல்லது ஆட்சிக்கு வந்தவுடன் செய்திருக்க வேண்டும் எனவும் அதற்கான நேரம் இதுவல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் தலைவர்கள் -
Reviewed by Author
on
September 01, 2019
Rating:

No comments:
Post a Comment