வவுனியாவில் போராட்டம்.....“இரத்தம் குடிக்கும் வரதரே வெளியேறு”
காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (06) வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் கடந்த 930வது நாள்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, வரதராஜப்பெருமாளின் முகம் பதிக்கப்பட்டு சித்திரிக்கப்பட்ட புகைப்படத்துக்கு விளக்குமாற்றால் அடித்து சாணத்தை கரைத்து ஊற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், “வெளியேறு வெளியேறு வரதரே”, ஒரிசாவுக்கு சென்றுவிடு” என்றும் கோசங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது அவர்கள் அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியங்களின் கொடிகளுடன் தமிழர் இரத்தம் குடித்த ஒட்டுக்குழு வரதர் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதை ஒன்றினையும் தாங்கியிருந்தனர்.
வவுனியாவில் போராட்டம்.....“இரத்தம் குடிக்கும் வரதரே வெளியேறு”
Reviewed by Author
on
September 07, 2019
Rating:

No comments:
Post a Comment