மன்னார்-ஜனாதிபதித் தேர்தலுக்கான முறைமைகள் கலந்துரையடல்-படம்
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவல கேட்போர் கூடத்தில் பவ்ரல் (paffrel) நிறுவனத்தின் ஏற்பாட்டில் 22-10-2019 10:30 மணி அளவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான முறைமைகள் மற்றும் தேர்தல் வாக்களிப்புகள் எப்படி நடைபெறும் என்பது தொடர்பாகவும் மற்றும் கடந்த தேர்தல்களில் பெண்களின் விகிதாசாரம் அடிப்படை எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மற்றும் குழு செயற்பாடுகள் மூலமாக பெண்கள் தேர்தலில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பங்குபற்றிய மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கூறுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 35 பேர் போட்டியிடுவதாகவும் மன்னார் மாவட்டத்தில் 76 வாக்குச்சாவடி நிலையங்களும். எட்டு வாக்கு எண்ணும் நிலையங்களும் காணப்படும் என கூறியிருந்தார்.
மேலும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் மன்னார் மாவட்டத்தில் தற்போது கிடைக்கப்பெற்று கொண்டிருப்பதாகவும் அனைவரும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை செய்ய முடியும் எனவும் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் முறைப்பாடு செய்யக்கூடிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் பங்குபற்றி அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து நிகழ்வு மதியம் 2 மணி அளவில் நிறைவுபெற்றது.

மன்னார்-ஜனாதிபதித் தேர்தலுக்கான முறைமைகள் கலந்துரையடல்-படம்
Reviewed by Author
on
October 23, 2019
Rating:
Reviewed by Author
on
October 23, 2019
Rating:


No comments:
Post a Comment