மக்கள் வெள்ளத்தில் தவிக்க இடம் பெயர்ந்த பின்னரே வெள்ள பாதிப்புகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-மன்னார் பிரதேச செயளாலர் தெரிவிப்பு-படங்கள்
கடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தாழ் நில கிராமங்களான ஜீவ புரம் ஜிம்றோன் நகர் சாந்திபுரம் ஆகிய கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன இந்த நிலையில் மக்கள் கடந்த சில நாட்களாக நீர் நிறைந்த வீடுகளில் இடம் பெயர முடியத நிலையில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிகளவான நீர் வீடுகள் மற்றும் பாதைகள் முன்பள்ளிகளில் தேங்கி காணப்படுகின்ற போதும் இதுவரை சம்மந்த பட்ட அதிகாரிகள் எந்த ஒரு அவசர அறிவுறுத்தல்களோ வெள்ள நிவாரண ஏற்பாடுகளோ செய்யவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த முகாமைதுவ பிரிவினரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது இதுவரை மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக வெள்ளப்பாதிப்புக்கள் தொடர்பாக எந்த வித பதிவுகளும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது அதே நேரத்தில் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது
இதுவரை எந்த வித பாதிப்புக்களும் பதிவு செய்யப்படவில்லை எனவும் மக்கள் இடம் பெயர்ந்தால் மாத்திரம் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் எங்கே இடம் பெயர்ந்து வசிப்பது வெள்ளப்பதிப்பின் போது எவ்வாறு பதிவு செய்வது என்பது தொடர்பாக தங்களுக்கு எந்த வித அறிவித்தல்களும் கிரம சேவகர்களால் வழங்கப்படவில்லை என்ற மக்களின் கேள்வியை பிரதேச செயளாலரிடம் வினவிய போது இத்தனை வருடம் இடம் பெயர்ந்த மக்களுக்கு எங்கே போவது என்று அறிவுறுத்தல் வழங்க வேண்டுமா என தெரிவித்தார் அதுடன் கிரம சேவகரோ மக்களோ யாரோ தெரிவித்தால் மாத்திரம் உடனடியாக செயற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் தகவல் வந்த பின்னரே நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவிப்பது எவ்வளவு பொருத்தமானது என்பது யார் கருத்தில் கொள்ளவேண்டிய விடயம்.

Reviewed by Author
on
October 22, 2019
Rating:
Reviewed by Author
on
October 22, 2019
Rating:

No comments:
Post a Comment