வாக்களிப்பது இறைவன் எமக்கு தரப்பட்ட உரிமை. தமிழ் மக்களின் பிரச்சனைக்குதீர்வு தரக்கூடியவரும் அபிவிருத்தியை முன்னெடுப்பவருக்கும் வாக்களிப்போம் மன்னார் ஆயர் இம்மானுவேல்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை பெற்றுத் தருவதுடன் மன்னார் மாவட்டம் அபிவிருத்தியில் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் இருப்பதால் இங்கு அபிவிருத்தியையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என தன்னை சந்திக்க வந்த அனைத்து வேட்பாளர்களிடமும் நான் இவ்வாறு வேண்டிக் கொண்டேன் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
பேசாலை கத்தோலிக்க சேமக்காலையில் அமைந்திருந்த பழமைவாய்ந்த சிற்றாலயம் யுத்தக்காலத்தில் பாதிப்படைந்திருந்தது.
புனரமைக்கப்பட்ட இவ் சிற்றாலயம் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை
(12.11.2019) திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கும் முகமாக மன்னார் மறைமாவட்ட
ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் அபிஷேகம் இடம்பெற்றது.
இவ் நிகழ்வின்போது பல நூற்றுக்கணக்கான கத்தோலிக்க மக்கள் மத்தியில் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தொடர்ந்து உரையாற்றுகையில்
எதிர்வரும் சனிக்கிழமை (16.11.2019) ஐனாதிபதி தேர்தல் எமது நாட்டில்
நடைபெற இருப்பது யாவரும் அறிந்த விடயம்.
இதில் எம் ஒவ்வொருவருக்கும் வாக்களிக்க வேண்டிய கடமை, பொறுப்பு உண்டு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
எமக்கு தரப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்கும் இறைவன் எமக்கு தரப்பட்ட உரிமை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இது விடயமாக மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் ஊடாக ஏற்கனவே தங்கள் அறிக்கையின் மூலம் எமது மறைமாவட்ட மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு உதவக்கூடிய வேட்பாளருக்கு நாம் வாக்களிப்போம் நாம் வாக்களிக்க தவறியபின் நாம் விரும்பாத மனிதன் ஆட்சிக்கு வந்துவிட்டானே என எண்ணி கவலைப்படக்கூடாது.
இந்த தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பெண்கள் உட்பட பௌத்த மத குருக்களும் போட்டியிடுகின்றனர்.
ஆகவேதான் எமது தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து தரக்கூடிய ஒரு நல்ல வேட்பாளரை தெரிவுசெய்து நாம் தவறாது வாக்களிப்போம்.
இவ் தேர்தல் காலத்தில் பல வேட்பாளர்கள் என்னை சந்தித்தனர்.
அவர்களிடம் நான் கேட்டவைகள் மன்னார் மாவட்டம் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றன.
இவ்வாழ் மக்கள் மிகவும் வறுமைகோட்டின்கீழ் வசித்து வருகின்றனர்.
ஆகவே தமிழ் மக்கள் நிம்மதியுடன் வாழும் தன்மையை ஏற்படுத்துவதுடன் இவ் மாவட்டத்தில் அபிவிருத்தியையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றும் நான் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.
ஆகவே அன்பின் இறைமக்களே எமது நாட்டுக்கு நல்லதொரு அரசியல் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என நாம் இறைவனிடம் கையேந்தி செபிப்போம் என கேட்டுக்கொண்டார்.

Reviewed by Author
on
November 15, 2019
Rating:

No comments:
Post a Comment